ஸ்ரீ ஜெயகௌரி ஜோதிடலாயம்
இளம் வருங்காலத் தலைமுறையினரை உன்னதக் கலையான ஜோதிடக் கலையினை அறிமுகப்படுத்தி, நமது பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்வின் தேவ இரகசியத்தை தெரிந்து கொள்ளச் செய்தலே நமது ஸ்ரீ ஜெய கௌரி ஜோதிடலாயத்தின் நோக்கம்.
உன்னதக் கலையான ஜோதிடம் பல வழிகளில் பலபேர் பலன் உரைக்கும் நிலைகளில் முரண்பாடுகள், பிழைகள் நிகழ்கின்றன. காரணம் ஜோதிடக்கலையில் அவரவர் புரிதலே ஆகும்.
ஆதலால் ஜோதிடக் கலை சிறப்பாகவும், துல்லியமாகவும் பலன் எடுத்து உரைக்க, வரும் சந்ததியினரும், வரும் தலைமுறையும், அறிந்து கொள்ள இந்த ஸ்ரீ ஜெயகௌரி ஜோதிடலாயம் வழிகாட்டியாக விளங்கும்.
ஆர்வமுள்ளவர்கள், பொருளாதாரநிலையில் பயில இயலாதவர்களுக்கு முன்னுரிமையும் முக்கியத்துவமும் கொடுத்து, இக்கலையைக் கற்றுக்கொடுப்பதில், ஸ்ரீ ஜெயகௌரி ஜோதிடலாயம் பெருமைக்கொள்கிறது.
இந்த உயரிய நோக்கத்தையும்,செயல்பாட்டையும் ஆதரித்து, எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்து உன்னதக் கலையான ஜோதிடக்கலையை தழைக்கச் செய்யுங்கள்.
இளம் தலைமுறையினரே எல்லாம் வல்ல இறைவன் அருளால் எண்ணிய எண்ணம் ஈடேற உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறது. ஸ்ரீ ஜெயகௌரி ஜோதிடலாயம்.
நன்றி